VCK IT WING
  • Home
  • இயக்கம்
    • இயக்க வரலாறு
    • கொள்கைகள்
    • கொடி விளக்கம்
  • கட்சி அமைப்பு
    • தலைமை
    • மாநில நிர்வாகம்
    • மாவட்ட நிர்வாகம்
    • துணை நிலை அமைப்புகள்
  • வெளியீடுகள்
    • இயக்க வரலாறு
    • நமது தமிழ்மண்
    • புகைப்படம்
    • கொள்கைப்பாடல்கள்
  • VCK IT WING Volunteer
  • Features
    • Lifestyle
    • Sports Group
      • Category 1
      • Category 2
      • Category 3
      • Category 4
      • Category 5
    • Sub Menu 3
    • Sub Menu 4
  • Contact Us

Desserts

Desserts

Cuisine

CUISINE

Appetizer

APPETIZER

Beverages

Beverages

Bread

Bread

 தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும்
ஒன்றிய அரசின் 

நிதிநிலை அறிக்கை !

தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

இந்திய ஒன்றிய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து உள்ள 'நிதிநிலை அறிக்கை' (பட்ஜெட்) நாட்டின் பொருளாதரத்தை மீட்டு எடுப்பதற்குப் பதிலாக மேலும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். தேர்தல் காலம் என்பதைக்கூடக் கருதாமல் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. தேர்தலுக்காகக்கூட எந்த அறிவிப்பும் இல்லை. இரயில்வே காரிடார் மேம்பாட்டில், 'சென்னை - ஐதராபாத்' மற்றும் 'சென்னை - பெங்களூரு' குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் எந்த இரயில்வே திட்டமும் இல்லை.
மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வு 41 விழுக்காடாகவே தொடரும் என்கிற 16 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையானது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை.
வரலாறு காணாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரி விதிப்பு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள திராணியற்று அமெரிக்க அரசோடு ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இதுவரை மோடி அரசால் செய்து கொள்ள முடியவில்லை. கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தையும் மோடி அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் கொடுத்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டணம் மிக மிக அதிகமாக்கிவிட்டது. மோடி அரசாங்கத்தின் பட்டதாரி இளைஞர்கள் எல்லாம் படிப்புக்கேற்ற வேலையில்லாமல் “கிக்” பணியாளர்களாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு பதவி ஏற்றதும் ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி விட்டது. “உற்பத்தித் துறையின் பங்களிப்பை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 25 விழுக்காடாக உயர்த்துவோம், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்” என்று அது அறிவித்தது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் கடந்தபிறகும் கூட ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15லிருந்து 17 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற மோடி அரசால் அமைப்புசார் துறையில் ஒட்டுமொத்தமாக இந்த 12 ஆண்டுகளில் 2 கோடி பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்க இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறு குறு நடுத்தர தொழில் துறை மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் சுமார் 70 ஆயிரம் சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அமைப்புசாரா தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் எல்லாம் மோடி அரசால் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பட்ஜெட் அறிவித்ததும் பங்குச் சந்தை கடுமையாகச் சரிவதைப் பார்த்தாலே இந்த பட்ஜெட் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட் இது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி




 பொங்கல் திருநாளின் மகத்துவம் காத்திட
தை முதல் நாளில் உறுதியேற்போம்!

பழந்தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக இன்றும் கொண்டாடப்படுகிற 'பொங்கல் பண்டிகை' யாவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கும் பெருவிழாவாக அமைந்திட எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தமிழ்ப்பெருங்குடி மக்கள் எத்தனை எத்தனை விழாக்களைக் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகை மட்டுமே 'தமிழர் திருநாள்' என்னும் பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழர்களின் நெடுங்காலப் பாரம்பரியத்தின் ஒரே பண்பாட்டு எச்சமாக விளங்கும் இப்பெருவிழா, மதம், சாதி போன்றவற்றின் தாக்கமில்லாத திருவிழாவாக நடைபெற்று வருவது இதன் சிறப்புகளுள் முதன்மையானதாகும். அதாவது, சாதியும் மதமும் ஆதிக்கம் செய்ய இயலாத சகோதரத்துவக் கூறுகளைக கொண்ட ஒரு மாபெரும் தேசிய இனமாகத் தமிழினம் வாழ்ந்தது என்பதற்குச் சான்றாக இன்றும் இது தனித்துவத்தோடு இயங்குகிறது.
உலகமெங்கும் மக்கள் ஏதேனும் மதம் சார்ந்தோ, அல்லது சாதி போன்ற ஏதோனும் ஒரு குலம் சார்ந்தோ இவ்வாறான பண்டிகைகளைக் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகத் தொடரும்போது, தமிழினம் மட்டுமே அத்தகைய அடையாளங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வெற்றிகரமாக இயங்குவது வியப்பினும் வியப்பாகும்.
இன்று தமிழினம் வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு சாதிகளையும் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் முன்னிறுத்தாமல், அல்லது அவற்றின் தாக்கத்திற்கு ஆட்படாமல், தமது தனித்துவத்தைச் சிதையவிடாமல் கட்டுக்கோப்புமிக்க பண்பாட்டு உறுதிப்பாட்டுடன் வீறுநடைபோடுவது நம் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தருகிறது.
அத்தகைய பெருமையோடு தமிழ் மக்கள் யாவரும் மகிழ்வோடு கொண்டாடும் இப்பெருநாளின் மகத்துவம் சிதைவுறாமல் அது மென்மேலும் செம்மையுறவும்; பண்பாட்டுத் திரிபுவாத கும்பலின் சதிமுயற்சிகளை முறியடித்து அதனைப் பாதுகாக்கவும்; தை முதல் நாளான பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.
மானுட சமத்துவம் போற்றும் யாவருக்கும் எமது மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.


Home

ABOUT ME

உள்ளது உள்ளபடி உணர்தலே புரிதலாகும் !-அதனை ஊடகத்தால் பிறருக்கும் உணர்த்தலே வெற்றியாகும். தொல்காப்பியன் திருமாவளவன்.

JOIN US

POPULAR POSTS

  • தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
  • பொங்கல் வாழ்த்துகள்

SUBSCRIBE & FOLLOW

Advertisement



About Blog



சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!

Popular Posts

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

By VCK IT WING Published at February 05, 2026
Image

பொங்கல் வாழ்த்துகள்

By VCK IT WING Published at January 19, 2026
Image

Copyright © VCK IT WING. Designed by BHIMARAO VCK