தொல். திருமாவளவன்

 பெயர் :தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17,1962)

தந்தை :தொல்காப்பியர்
தாய் :பெரியம்மா
பிறந்த ஊர் :அரியலூர் மாவட்டம் அங்கனூர்

கல்வி:

புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79) அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம். பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82) மாநிலக் கல்லூரி, சென்னை. பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85) சென்னை பல்கலைக் கழகம், சென்னை

சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88) சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.
அரசுப்பணி :

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.