நமது தமிழ்மண் இதழுக்கான வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்குரிய "க்யூ ஆர் கோட்" ( QR Code)
தோழர்களே வணக்கம். கீழ்க் காணும் குறியீடு நமது தமிழ்மண் இதழுக்கான வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்குரிய அனுமதியாகும். இதுவே ஆங்கிலத்தில் "க்யூ ஆர் கோட்" ( QR Code) என்பதாகும். இதன் மூலம் இதழுக்கான 'வாழ்நாள் உறுப்பினர் கட்டணம்' மற்றும் பொறுப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை மிக இலகுவாகச் செலுத்த இயலும். அதற்கான ஒப்புகைச் சீட்டும் (ரசீது) உடனே நமது கைபேசிக்கு வந்துவிடும். அதனைச் சான்றாவணமாக விண்ணப்பத்தோடு இணைத்து வழங்கலாம். முதலில் நூறு ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இக்குறியீட்டு வழியாக பணம் செலுத்தி ஒப்புகைப் பெற்ற பின்னர், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்தக்குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு உங்கள் கை பேசியில் பணம் செலுத்துவதற்கான 'செயலி'யைப் ( #APP) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, ஜிபே (#Gpay), பேடிஎம் (#Paytm), போன்ற ஏதேனும் ஒரு 'ஆப்' பினை தங்களின் கைபேசியில் கொண்டிருக்க வேண்டும். இதனை தோழர்கள் உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனைப் பயன்படுத்த இயலாதவர்கள் வரைவோலை (DD) மூலம் கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
-@தொல்.திருமாவளவன்.
0 Comments